நாடாளுமன்ற குழுவை மறுசீரமைத்தது பாஜக......

நாடாளுமன்ற குழுவை மறுசீரமைத்தது பாஜக......

நாடாளுமன்ற குழு:

ஜேபி நட்டா, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட 11 பேர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் மத்திய பிரதேசத்தின் சிவ்ராஜ் சவுகான் ஆகியோர் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சர்பானந்த சோனோவால், எடியூரப்பா, லக்‌ஷ்மன், இக்பால் சிங் லால்புரா, சத்யநாராயணன் ஜதியா, சுதா யாதவ் புதிதாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குழுவை சமூக ரீதியாகவும் மாநில ரீதியாகவும் பிரதிநித்துவப்படுத்தும் முயற்சியே நாடாளுமன்ற மறுசீரமைப்பு ஆகும்.

நாடாளுமன்ற குழுவில் இணைக்கப்பட்டுள்ள முதல் சீக்கியர் இக்பால் சிங் லால்புரா ஆவார்.

மத்திய தேர்தல் குழு:

மத்திய தேர்தல் குழுவில் நாடாளுமன்ற குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இடம்பெறுவர்.  மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஓம் மாத்துர், பாஜக்வின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரும் அடங்குவர்.

மத்திய முன்னாள் அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன் மற்றும் ஜூவல் ஓரம் ஆகியோர் மத்திய தேர்தல் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.