இந்தியாவின் ஒரே கட்சி பாஜக மட்டுமே-நட்டா

இந்தியாவின் ஒரே தேசிய கட்சியாக பாஜக இருப்பதால் எந்த ஒரு கட்சியும் பாஜகவை எதிர்த்து போட்டியிட முடியாது என பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒரே கட்சி பாஜக மட்டுமே-நட்டா

பாஜகவின் உயர்மட்டகுழு கூட்டத்தில் பேசிய நட்டா காங்கிரஸை  சகோதர சகோதரி கட்சி என விமர்சித்துள்ளார்.  அவர் மாநில கட்சிகளையும் விட்டுவிடவில்லை.  பீகாரில் லல்லுவின் ஆர்ஜெடி, உ.பியில் அகிலேஷின் சமஜ்வாடி, மகாராஷ்டிராவில் சிவசேனா, ஒடிஷாவின் பிஜூ ஜனதாதளம், தமிழ்நாட்டின் குடும்ப கட்சிகள் போன்றவை அரசியல் செய்யும் தகுதியை இழந்து விட்டன அல்லது இழந்து வருகின்றன எனவும் கூறியுள்ளார்.

பாஜக மட்டுமே அரசியல் சித்தாந்ததுடன் செயல்படுகிறது என பேசியுள்ளார் நட்டா.  சகோதர சகோதரி தத்துவம் கொண்ட கட்சிகளும் குடும்ப கட்சிகளும் விரைவில் செயலிழந்து விடும் எனவும் கூறியுள்ளார்.  எந்த தேசிய கட்சிக்கும் பாஜகவை எதிர்த்து போரிடும் தகுதி இல்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியலில் பாஜக:

வாரிசு அரசியலை ஜனநாயகத்தின் "பெரிய எதிரி" என்று கூறும் பாஜகவும் அதையேதான் செய்து வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஆனால் வாரிசு அரசியல் மீதான அவரது வெறுப்பு,  பாஜகவிலோ அல்லது  அமைச்சர்கள் குழுவிலோ சேர்க்கும்போது வரவில்லை. பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர், நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா போன்ற அமைச்சர்களின் அரசியல் குடும்பங்களில் பல முக்கிய முகங்கள் கட்சிக்கு வந்துள்ளன.

2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் போட்டியிட இருப்பதாகவும் பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.