அடுத்த 40 ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தம் தொடரும் - அமித்ஷா!

அடுத்த 40 ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தம் தொடரும் - அமித்ஷா!

இந்தியாவில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தம் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது அரசியல் தீர்மானத்தை அமித்ஷா முன்மொழிந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது என்றும், கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடுகிறார்கள், ஆனால் கட்சித் தலைவரை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருந்து வரும் என நம்பிக்கை தெரிவித்த அமித்ஷா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் குடும்ப ஆட்சியை பா.ஜ.க முடிவுக்கு கொண்டு வரும் என்றும் தமிழகம், ஆந்திராவில் அதிகாரத்தை கைப்பற்றும் என்றும் கூறினார்.