தொடர் அமளியால் புதன்கிழமை வரை இருஅவைகளும் ஒத்திவைப்பு!

தொடர் அமளியால் புதன்கிழமை வரை இருஅவைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும்  ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட அமர்வு ஒருமாத இடைவெளிக்கு பின் மார்ச் 13-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பமான முதல் நாளே அதானி விவகாரம், ராகுல் காந்தியின் கேம்பிரிட்ஜ் உரை குறித்து எதிர்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. 

இதையும் படிக்க : அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்நிலையில் இரண்டாம் நாளாக கூடிய அமர்வில் அவை தொடங்கியதும் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவும், அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்கட்சிகளும் முழக்கங்களை எழுப்பினர். தொடர் கோஷத்தால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் கூடிய நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால்  மீண்டும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.