”டெல்லியை தலைமையிடமாக கொண்டு நடக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 2.0”- பழனிவேல் தியாகராஜன்

”டெல்லியை தலைமையிடமாக கொண்டு நடக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 2.0”- பழனிவேல் தியாகராஜன்

பிரிட்டிஷ் ராஜ் 2.0 லண்டணுக்கு பதிலாக டெல்லியிலிருந்து இயக்கப்படுகிறது என ஆக்ஸ்போர்டு விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ளார் தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

நன்மைகள் புதைக்கப்படுகிறது:

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட நேரத்தில் மார்க் ஆண்டனி பேசிய “மனிதர்கள் செய்யும் தீமை அவர்களுக்குப் பிறகும் வாழ்கிறது. ஆனால் அவர்கள் செய்யும் நன்மையானது அவர்களின் எலும்புகளுடன் புதைக்கப்படுகிறது” என்ற புகழ்பெற்ற உரையுடன் தன் பேச்சை தொடங்கினார் பழனிவேல் தியாகராஜன். 

பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 2.0:

பிரிட்டிஷ் ராஜ்ஜியம் என்பது இந்தியாவில் கடந்த காலத்தின் நிகழ்வு என்றாலும் இப்போதும் டெல்லியில் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 2.0 நடைபெறுகிறது என பேசியுள்ளார் தியாகராஜன். 

உண்மையை கூற வேண்டுமானால் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இறந்து விட்டது எனவும் தற்போது புதிய மாற்றம் அல்லது உயிர்த்தெழுதல் நடந்துள்ளது எனவும் தியாகராஜன் கூறியுள்ளார்.  நீங்கள் அதை இரண்டு வழிகளில் பார்க்கலம். ஒரு காலத்தில் இங்கிலாந்தில்,காலனித்துவப்படுத்தப்பட்டவர்கள்  ராஜ்யத்தைக் கைப்பற்றினர். அதையே இந்தியாவில் பார்த்தால் இன்றளவும் ராஜ்ஜியத்தின் 2.0 முறையே லண்டனுக்கு பதிலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.

இந்தியர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியா:

பிரிவினைக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தற்போது இந்தியாவில் வசிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் பழனிவேல் தியாகராஜன்.  கட்டமைக்கப்பட்ட அமைப்புகளில் கல்வியாக இருந்தாலும் சரி உள்கட்டமைப்பாக இருந்தாலும் சரி பள்ளியாக இருந்தாலும் சரி மொழியாக இருந்தாலும் சரி அது முந்தைய காலணித்துவ ஆட்சியால் முழுமையடவில்லை எனக் கூறியுள்ளார் தியாகராஜன்.  சுதந்திரத்தை ஒட்டிய காலகட்டத்தை நோக்கும் போது ஆண்டுக்கு 500 பொறியாளர்களை மட்டுமே உருவாக்க முடிந்தது எனவும் ஆனால் அதுவே 1947 முதல் இன்றைய காலகட்டம் வரை ஆண்டுக்கு 1,50,000 பொறியாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது என பழனிவேல் பேசியுள்ளார்.  மேலும் இது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் சாத்தியமானது அல்ல எனவும் இந்தியர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

பன்மொழி இந்தியா:

மொழியை குறித்து பேசும் போது ஆம் நாம் அனைவரும் ஆங்கிலம் தான் பேசுகிறோம் எனவும் ஆனால் அதையே இந்திய மாநிலம் முழுவதுமாக பார்க்கும்போது பெரிய மாறுதல்களை காண முடிகிறது என கூறியுள்ளார்.  மேலும் சில மாநிலங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான மக்களே ஆங்கிலம் பேசுவதாகவும் இன்னும் சில மாநிலங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆங்கிலம் பேசுவதாகவும் கூறியுள்ளார். ஆங்கில மொழி மாற்றம் என்பது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கலைப்பொருளாக இருந்திருந்தால் 75 ஆண்டுகளுக்கு பின்பு இத்தகைய வேறுபாடு இந்தியாவில் இருந்திருக்க கூடாது என மேலும் அவர் தெரிவித்துள்ளார். 

உள்கட்டமைப்பு வளர்ச்சி:

சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், தொலைதொடர்பு குறித்து பார்க்கும் போது இந்த வளர்ச்சிகள் சுதந்திரமடைந்தவுடனே ஏற்படவில்லை எனவும் 1991க்கு பிறகு தாராளமயமாக்கலுக்கு பிறகு ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.  இந்த வளர்ச்சிகள் எதுவும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்து பெறப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.  தொன்மையான பல சட்டங்கள் அதனை பற்றி நன்கறிந்த மக்களால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன எனவும் நம்முடைய சட்டங்களுமே அதனை பற்றி முழுமையாக அறிந்தவர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது எனவும் இது மனித இயல்பு மாற்ற முடியாதது எனவும் பேசியுள்ளார் நிதியமைச்சர்.

விளையாட்டில் ஆதிக்கம்:

விளையாடுகளை குறித்து பேசும்போது 1960கள் 1970களுகளிலிருந்து இன்று வரை டென்னிஸ், கிரிக்கெட், ஸ்குவாஷ், செஸ் போன்ற விளையாட்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனக் கூறியுள்ளார்.  இது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் நடைபெற்ற ஒன்றல்ல எனத் தெரிவித்துள்ளார். 

சந்தை டூ பிராண்ட் இந்தியா:

இறுதியாக தொழில்துறை குறித்து பார்க்கும்போது பிரிட்டிஷ் இந்தியாவில் மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் இடமாக மட்டுமே பார்த்தது எனவும் அவற்றை அவர்களது சொந்த நாட்டுக்கு கொண்டு சென்று பயன்படு பொருளாக மாற்றினர் எனவும் மாற்றிய பொருளை விற்கும் சந்தையாக மட்டுமே இந்தியாவை பயன்படுத்தினர் எனவும் கூறியுள்ளார்.  இதனால் அவர்கள் இருபுறமும் வர்த்தகம் செய்தனர் எனவும் மேலும் கூறியுள்ளார்.

இந்த வழக்கத்தை இந்தியாவே மாற்றியது எனவும் நாங்களே பஞ்சிலிருந்து நூலை எடுத்து நூலை நூற்கண்டாக்கி நூற்கண்டை ஆடையாக்கி தற்போது ஆடையை பிராண்டடாக மாற்றியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.  இது எளிதான விஷயம் அல்ல எனவும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்தியாவில் இயந்திரமாதலை விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலவதியான ராஜ்ஜியம்:

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் அவருடைய உரையை முடிக்கும் போது ’டெட் பாரட் ஷோ’ என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் புகழ்பெற்ற வசனமான ”அது (ராஜ்) காலம்கடந்தது. அது நின்று போனது. அது காலாவதியானது மற்றும் அதை உருவாக்கியவரை சந்திக்கச் சென்றுவிட்டது. அது வாழ்க்கை இல்லாமல் அமைதியாக இருக்கிறது” எனக் கூறி இந்த பிரிட்டிஷ் ராஜ்ஜியம் காலணித்துவ காலத்தின் ஒரு பழைய கலைப்பொருள் என்று கூறி அவருடைய உரையை முடித்தார்.

அவரது உரையின் முடிவில் அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டை தெரிவித்தனர்.

                                                                                                                                       -நப்பசலையார்

இதையும் படிக்க: ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் உக்ரைன் காரணமா....!!!!