ஜீன்ஸ், டீசர்ட் அணிய சிபிஐ அதிகாரிகளுக்கு தடை..!!!

சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணியவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ஜீன்ஸ், டீசர்ட் அணிய சிபிஐ அதிகாரிகளுக்கு தடை..!!!

சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணியவதற்கு சிபிஐ இயக்குநர் சுபோத்குமார் ஜெயிஸ்வால் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சிபிஐ அமைப்பின் 33வது இயக்குநராக பதவியேற்ற அவர், நிர்வாக ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் அவர் பிறப்பித்த உத்தரவில், சிபிஐ ஆண் அதிகாரிகள் சாதாரண பேண்ட், சட்டை, ஷூ அணிந்து வரலாம் என்றும், ஜீன்ஸ், டீ-சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் பொருந்தும் எனவும், அனைத்து கிளை அலுவலகங்களின் தலைவர்கள், அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இதனை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.