மத்திய அரசின் சலுகையால் ஏர்டெல், ஜியோவுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை...

தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளின் விளைவாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. அதாவது தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்த 4 ஆண்டுகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுள்ளதுடன், 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைதொடர்பு நிறுவனங்களின் பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஏர்டெல் மற்றும் ஜியோ முறையே 11 ஆயிரத்து 900 கோடியும், 4 ஆயிரத்து 300 கோடி அளவுக்கும் ஆண்டுக்கு கூடுதலாக பணப்புழக்கத்தை பெற உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியை தொலை தொடர்பு நிறுவனங்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5ஜி அலைக்கற்ற ஏலத்தில் முதலீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.