மத்திய அமைப்புகள், ஆளுநரை ஏவி விடும் பாஜக - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

மத்திய அமைப்புகள் மற்றும் ஆளுநரை ஏவிவிட்டு, பாஜக மிக மோசமான அரசியலை முன்னெடுப்பதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

மத்திய அமைப்புகள், ஆளுநரை ஏவி விடும் பாஜக - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அண்மையில் மகராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதனிடையே இன்று மும்பை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் ஜாதவ் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது.

இந்தநிலையில் இச்சம்பவங்களை குறிப்பிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவசேனா  எம். பி சஞ்சய் ராவத், பாஜக மிக மோசமான அரசியலில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

தேர்தலில் தோல்வியை தழுவியதற்காக மத்திய அமைப்புகள் மற்றும் ஆளுநரை ஏவி விடுவதாகவும், மேற்குவங்கத்தில் நடைபெறும் செயலே நாட்டில் எத்தகைய ஜனநாயகம் நிலவுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு எனவும், இதனை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.