நிலவை 9ஆயிரம் முறை சுற்றி வந்த சந்திரயான் – 2: நிலவு குறித்து பிரமிப்பை ஏற்படுத்தும் தகவல்...

சந்திரயான் - 2 செயற்கைக் கோள், நிலவின் சுற்று வட்டப் பாதையை 9ஆயிரம் முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவை 9ஆயிரம் முறை சுற்றி வந்த சந்திரயான் – 2: நிலவு குறித்து பிரமிப்பை ஏற்படுத்தும் தகவல்...

நிலவு குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 செயற்கைக் கோள், இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி, பெங்களுரில் இஸ்ரோவின் இரு நாள் பயிலரங்கம் நேற்று நடைபெற்றது.

 இந்த பயிலரங்கத்தில் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், இரு ஆண்டுகளில் சந்திரயான் - 2 செயற்கைக் கோள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9,000 முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளது. இதில், எட்டு வித ஆய்வுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் நன்கு இயங்கி வருவதாக கூறினார்.

நிலவில் நீர், கனிமம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய தகவல்களை சந்திரயான் - 2 செயற்கைக் கோள் அனுப்பியுள்ளது என குறிப்பிட்ட சிவன், அவை பிரமிக்க வைப்பதாக  தெரிவித்தார். இந்த அறிவியல் தகவல்கள் இஸ்ரோ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், கல்வி மையங்கள் ஆய்வு செய்யலாம் என சிவன் அறிவித்துள்ளார்.