திருமணம் செய்து கொள்வதாக 100 பெண்களை ஏமாற்றி - ஒரு கோடி பணத்தையும் சுருட்டிய வாலிபர்!!

பதிமூன்று மாநிலங்களை சேர்ந்த  சுமார் 100 பெண்களிடம் வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி தனது வலையில் விழ வைத்து ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை கறந்த சம்பவம்ப் நிகழ்ந்தேறி இருக்கிறது.

திருமணம் செய்து கொள்வதாக 100 பெண்களை ஏமாற்றி - ஒரு கோடி பணத்தையும் சுருட்டிய வாலிபர்!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சார்ந்தவர் தான் பர்கான் தசீர்கான். இவருக்கு வயதோ 35 கடந்த 2015 ஆம் ஆண்டின் பொழுது இவர் காண்ட்ரக்டராக இருந்துள்ளார். இவருக்கு சொந்தமாக பல வாகனங்கள் இருக்க, இவரது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. 

தனது தாய்க்காக தன்னுடைய அனைத்து வாகனங்களையும்  விற்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதன் மூலமாக கடன் சுமை பெருக அதனை திரும்ப செலுத்த சிரமப்பட்டு ஒடிசாவுக்கு சென்று பழைய கார்களை வாங்கி விற்பனை செய்வதில் ஈடுபட்டு வந்தார். இருப்பினும் அவ்வேலையில் போதிய வருமானம் கிட்டவில்லை. இவருக்கு திருமணம் நிகழ்ந்து மூன்று வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. 

இதையடுத்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணியவர் அதற்காக என்ன செய்ய வேண்டும் என சிந்திக்கையில், தனக்கென இணையத்தளத்தில் ஐ.டி யை உருவாக்கி தனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை எனவும் தன்னை பிடித்தவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தொலைபேசி எண்ணையும் பதிவிட்டு இருந்தார். 

அதனை தொடர்ந்து அவர் என்ஜினியரிங் படித்து முடித்து ஆண்டுக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பாதித்து வருவதாகவும் கதை விட்டுள்ளார். மேலும் பார்த்தவுடன் பெண்களுக்கு பிடித்து போகும் வகையில் தனது ஸ்டைலான புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டும் வந்துள்ளார். இதனை உண்மை என நம்பிய சில பெண்கள் அவரை தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். 

இவையெல்லாம் ஒருபுறம் சென்று கொண்டிருக்க,  தன்னை நம்பி வந்து பேசும் பெண்களை தனியாக சந்திக்க வேண்டும் என கூறி ஒரு இடத்திற்கு அழைத்து செல்வதே  பர்கான் தசீர்கானின் வேலை. இதன்படி உண்மை என்ன என்பதை அறியாத அப்பாவி பெண்களும் அவ்விடத்திற்கு செல்வார்கள். 

அந்த பெண்களை கவரும் வகையில் பர்தான் தசீர்கான் பி.எம். டபுள்யூ சொகுசு காரில் டிப்டாப்பாக உடை அணிந்து செல்வார். அந்த காரில் வி.வி. ஐ.பி, பயன்படுத்தும் பேன்சி நம்பரும் இடம் பெற்று இருக்கும். விலை உயர்ந்த செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை அவர் பயன்படுத்தினார். 

இவரது தோரணையை பார்த்து ஏமாந்து போன பெண்கள் அவரிடம் மனதை பறிகொடுத்துள்ளனர். இதையடுத்து அவர் சொகுசு காரிலும் பெண்களை அழைத்து சென்று நட்சத்திர ஓட்டல்களில் உணவுகளை வாங்கி கொடுத்து அசத்துவார். அப்போது தன்னை முழுமையாக நம்பும் பெண்களிடம் விரைவில் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்றும் அதனால் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.


இதுபோன்று செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட அவர் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்த 100 பெண்களிடம் அவர் இது போன்று திருமண ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி சுமார் ரூ. 1 கோடி வரை பணத்தை கறந்தார்.

இதனை தொடர்ந்து அவரை திருமணம் செய்து கொள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பெண் டாக்டர் ஒருவர் சம்மதம் தெரிவித்தார். அவரிடமும் வழக்கம் போல தனது பந்தாவை காட்டி அவரிடம் இருந்து தொழில் தொடங்குவதாக கூறி ரூ. 15 லட்சத்தை பறித்தார்.

டாக்டரை ஏமாற்றி விட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் மருத்துவர் தொடர்ந்து அவருக்கு தொலைபேசி மூலம் அழைக்க அவர் பதில் தெரிவிக்காமல் அலட்சியம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஆத்திரம்டைந்த பெண் மருத்துவரோ தன்னை ஏமாற்றி 15 லட்சம் பறித்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் அவரை வலைபோட்டு தேடியுள்ளனர். 

அவ்வப்போது டெல்லியில் பதுங்கி இருப்பதை அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று மடக்கி பிடித்துள்ளனர். இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள பல பெண்களை மேற்கூறிய செய்திகளில் பின்வருமாறு ஏமாற்றிய வேலைகள் அனைத்தும் காவல் துறைக்கு தெரிய வந்தது. 

அவரிடம் இருந்து ஏமாந்த பெண்கள் குறித்து பட்டியலை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். மேலும் இவர் பற்றிய மேலும் அறிந்து கொள்ள வெண்டிய செய்திகள் வெளி வரலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.