முதலமைச்சருக்கு அதிமுக குறித்து பேசுவதற்கும் ஒரு யோக்கியதை வேணும் - இபிஎஸ்

திமுக அரசின் 18 மாத ஆட்சிக்காலத்தில் பால் விலை, மின் கட்டணம் , சொத்துவரி உயர்வு மட்டும் சாதனை - இபிஎஸ்

முதலமைச்சருக்கு அதிமுக குறித்து பேசுவதற்கும் ஒரு யோக்கியதை வேணும் - இபிஎஸ்

 

 

அதிமுக மீது வீண்பழி போடுவதை திமுக நிறுத்த வேண்டும் - இபிஎஸ்

கோவையில் அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசின் சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரதப்போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கோவை சிவானந்தா காலணியில் நடைபெற்றது . இதில் எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான இபிஎஸ் கலந்துக்கொண்டார்.

இபிஎஸ் உரை : 

ஒரு ஆட்சி எப்படி எல்லாம் செயல்படக்கூடாது . முதல்வர் எப்படி எல்லாம் நடந்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு கடந்த 18 மாத திமுக அரசின் ஆட்சியே சாட்சி.

முதலவராக இருக்க கூடிய ஸ்டாலின் அதிமுக மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்வதை முதல்வரும் அமைச்சர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் .

 அதுமட்டுமின்றி தொண்டர்களிடையே தொடர்ந்து பேசிய இபிஎஸ். திமுக பொறுப்பேற்று இந்த 18 மாத காலம் ஆகிறது ஆனால் 18 மாதத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு என்ன நன்மை செய்திருக்கிறது ? கோவை மட்டுமல்ல தமிழகத்திற்கும் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களுக்கு இவர்கள் இப்போது பெயர் வைத்துக்கொள்கிறார்கள் .

இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது . முதலமைச்சரும் அமைச்சர்களும் வேண்டுமேன்றே திட்டமிட்டே அதிமுக ஆட்சியின் மீது அவதூறு, வெறுப்பு பிரச்சாரத்தையும் செய்கிறார்கள் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் பொம்மைபோல தான் செயல்படுகிறார். தமிழகத்தை ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தை முழுமையாக கார்பரேட கம்பெனி ஆண்டு கொண்டிருக்கிறது. இப்படியிருக்கையில் முதலமைச்சர் அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில்  தமிழகம் பாழாகிவிட்டதாகவும், நாசாமாக்கிவிட்டதாகவும் பேசுகிறார்.

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி. ஏராளமான திட்டங்களும் அதாவது மருத்துவகல்லூரிகள் அதிகமாக கட்டப்பட்ட காலம் அதிமுகவின் ஆட்சிகாலம். தொழில்வளம் விரிவடைய அதிக  நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அம்மாவின் மறைவிற்கு பின்னால் என்னுடைய தலைமையில் 4 வருடம் 2 மாதம் சிறப்பாக ஆட்சி தந்தோம் . அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடைகிறது. கொலை, கொள்ளை சர்வசாதராண்மாக நடைபெறுகிறது. குடும்ப ஆட்சி நடத்துகிற முதல்வருக்கு அதிமுக குறித்து பேசுவதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும் எனவும் பேசினார்.