விவசாயிகள், போலீசார் இடையே மோதல்...கோரிக்கை தான் என்ன?

விவசாயிகள், போலீசார் இடையே மோதல்...கோரிக்கை தான் என்ன?

சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்ததையடுத்து, காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

போராட்டத்தில் குதித்த விவசாயிகள்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கண்டேகெலா பகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி கரியாபந்த் நெடுஞ்சாலையில் குவிந்த கண்டேகெலா கூட்டுறவு சங்க விவசாயிகள் காரியாபந்த் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிக்க: பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி... சொன்னது என்ன?

கலவரமான போராட்டம்:

இந்த போராட்டத்தினால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தடுக்க முற்பட்ட போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சூரையாடப்பட்டதோடு மட்டுமில்லாமல்,  மூன்று போலீசாருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. போராட்டமாக தொடங்கப்பட்டது இறுதியில் கலவரமாக முடிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.