கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் பேரணி ஆர்ப்பாட்டம்...!

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் வழங்க கோரி 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் பேரணி ஆர்ப்பாட்டம்...!

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் முன்கூட்டியே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, 

சுதேசி பஞ்சாலை அருகே தொடங்கிய பேரணியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று, சட்டமன்றத்திற்கு அருகே சென்ற போது போலிசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், பேரணியில் .கலந்துகொண்ட ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அரசு உடனடியாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாக போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.