கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு..

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு..

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இப்போது வரை 4 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ஆறு வாரங்களுக்குள் வெளியிடும்படி தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 30ஆம் தேதி அறிவுறுத்தியது. இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாயை இழப்பீட்டு தொகையாக வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இழப்பீட்டு தொகையை பெற கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மரணம் என்ற சான்றிதழ் கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பொறுப்பை முமுக்க முழுக்க மாநில அரசே ஏற்றுக் கொள்ள முடியாது என்று கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், இழப்பீட்டு தொகையை வழ்ங்கும்  பொறுப்பை மாநில அரசுகளிடம் விட்டுவிட்டு, மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது எனறு கூறினார். மேலும் இழப்பீட்டு தொகைக்கான பெரும் பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.