அசோக் கெலாட், சசி தரூர் இடையே போட்டி...யார் அடுத்த காங்கிரஸ் தலைவர்?

அசோக் கெலாட், சசி தரூர் இடையே போட்டி...யார் அடுத்த காங்கிரஸ் தலைவர்?

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் மூத்த தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான சசிதரூர் வேட்புமனுவை வாங்கியுள்ளார். 
 
காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்தநிலையில் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னர் கட்சிக்கு  நிரந்தர தலைவர் தேவை என்ற அவசியம் நிலவுவதால் வருகிற அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்... காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்...!

வேட்பு மனுத்தாக்கல்:

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வருகிற 30ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், இதன் மீதான பரிசீலனை அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் எனவும் கூறப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது. 

சசிதரூர் அசோக் கெலாட் போட்டி:

இந்த நிலையில் இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.பி சசிதரூரின் பிரதிநிதி, காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியை சந்தித்து வேட்புமனுவை பெற்றுக்கொண்டுள்ளார். இவரை போல் ராஜஸ்தான் முதலமைச்சர் 
அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலரும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.