பாஜகவிற்கான கவுண்ட்டவுனைத் தொடங்கியது காங்கிரஸ்...!!!

பாஜகவிற்கான கவுண்ட்டவுனைத் தொடங்கியது காங்கிரஸ்...!!!

இந்திய ஒற்றுமை பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், தெலுங்கானாவில் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. 

காங்கிரஸால் மட்டுமே முடியும்:

”தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளும் சூழ்நிலைகளுக்கேற்ற கட்சிகள்.  பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் மட்டுமே போராட முடியும்.” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மோடிக்கான கவுண்ட்டவுன்:

தொடர்ந்து பேசிய ஜெய்ராம், “கேசிஆர் மற்றும் பிரதமர் மோடிக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.

இரட்டை என்ஜின் அரசாங்கம்:

மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள மோடி மற்றும் ராவ் அரசுகள் இரண்டையும் "இரட்டை என்ஜின்கள்" என்று அழைத்த காங்கிரஸ் தலைவர், ரயில் தவறான பாதையில் பயணிக்கிறது எனவும் கூறியுள்ளார்.  

மேலும் அனைத்து மாநில கட்சிகளுக்கும் பாஜகவுடன் நல்ல புரிதல் உள்ளது எனவும் அமலாக்க துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு அனைத்துக் கட்சிகளும் பயப்படுகின்றன எனவும் கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.  

தேர்தல் நோக்கமில்லை:

இந்திய ஒற்றுமை பயணத்திற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை எனவும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார் ஜெய்ராம்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ”இரண்டுக்கும் ஒரே மரியாதை வேண்டும்” வழக்கு தொடர்ந்த மனுதாரர்!! மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!!!