மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுக்கும் காங்கிரஸ்...

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுக்கும் காங்கிரஸ்...

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதில் ஒரு யூனியன் பிரதேசமான காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமை யில் 24-ந்தேதி ஆலோசனை கூட்டம்  டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதிருப்பது, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன கொள்கைகள் மீதான நேரடி தாக்குதல் என காங்கிரஸ் நம்புகிறது என தெரிவித்தார்.

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கி, தேர்தலை நடத்துவதன் மூலம் மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும், டெல்லியில் இருந்து ஆட்சி செய்வதற்கு பதிலாக மாநிலத்தில் சொந்தமாக சட்டமன்றத்தை உருவாக்கி தங்கள் நலன்களை அவர்களே பெற்றுக்கொள்ளவும் முடியும் எனக்கூறிய சுர்ஜேவாலா, இது குறித்து பிரதமரும், பாரதிய ஜனதாவும் முடிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.