தொடங்கிய கட்டுமான பணிகள்... 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!!

தொடங்கிய கட்டுமான பணிகள்... 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!!

ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தில் துறைமுக கட்டுமான பணியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி துவங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் வங்கக் கடலில் 5156 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்தது.  ஆந்திர மாநில அரசின் சொந்த துறைமுகமாக அமைய இருக்கும் இதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளன.

மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையும் மசூலிப்பட்டினம் துறைமுக கட்டுமான பணியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று துவக்கி வைத்தார்.  இதன் மூலம் 25 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகும் விளை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் ஆகிவற்றை இங்கிருந்து எளிதில் ஏற்றுமதி செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநில அரசுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

இதையும் படிக்க:  இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்...உதயநிதி!!