ஜனவரி 12ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு - மன்சுக் மாண்டவியா

வரும் ஜனவரி 12ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு

ஜனவரி 12ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு - மன்சுக் மாண்டவியா

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

முதுநிலை மருத்துவ படிப்பில் சோ்வதற்கான நீட் தோ்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதம் என இரு முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள், செப்டம்பர் மாத இறுதியில் வெளியான நிலையில், கலந்தாய்வு தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், இது கொரோனா தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்துக்கு மேலும் வலு சோ்க்கும் என்றும், மருத்துவ மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.