3 மாதங்களுக்குப் பின் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 மாதங்களுக்குப் பின் 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

3 மாதங்களுக்குப் பின் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா..!

நாடு முழுவதும் ஒரே நாளில் 12 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைவிட 38 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 2 புள்ளி 35 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று மட்டும் 7 ஆயிரத்து 624 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 195 புள்ளி 67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.