ரூபாய் நோட்டுகளை விட - கிரெடிட் கார்டுகளில் அதிகம் நேரம் உயிர்வாழும் கொரோனா வைரஸ்!

ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும் பொழுது கிரெடிட் கார்டுகளில் தான் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக சொல்லப்படுகிறது. 

ரூபாய் நோட்டுகளை விட - கிரெடிட் கார்டுகளில் அதிகம் நேரம் உயிர்வாழும் கொரோனா வைரஸ்!

கடந்த 2019 ஆம் ஆண்டின் பொழுது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் பல்வேறு பொருடகளில் பல மணி நேரம் உயிர் வாழும் தன்மை கொண்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். 

காகிதம் , பிளாஸ்டிக் , பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் படர்ந்து இருக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. குறிப்பாக மக்களின் அன்றாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் மூலமும் கோரொனா வைரஸானது பரவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை தவிர்த்து கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம் என வலியுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் தான் ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கிரெடிட் கார்டுகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டது.  கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு அதில் கொரோனா வைரஸ் எத்துனை மணி நேரம் உயிரோடு இருக்கும் என ஆராய்ந்து பார்த்த போது அதில் 48 மணி நேரத்துக்கு மேலாகவும் வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது. 

4 மணி நேரத்துக்கு பிறகு 99.6 சதவீதமாகவும், 24 மணி நேரத்துக்கு பிறகு 99.96 சதவீதமாக குறைந்தாலும் 48 மணி நேரம் பிளாஸ்டிக் கார்டுகளில் அவை உயிர் வாழுகின்றன. அதே போல் கார்டுகளை போலவே நாணயங்களிலும் கொரோனா வைரஸ் 24 மற்றும் 48 மணி நேரத்திற்குப்பிறகு சிறிய அளவில் உயிர் வாழ்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.