34வது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஊழல் - ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை..

34வது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஊழல் - ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை..

34வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பாண்டு டிர்கியின் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் விளையாடுத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பாண்டு டிர்கியின் ராஞ்சி வீட்டில், சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை முதலே சோதனை நடைபெற்று வருவதாகவும், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.