கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தைமயமாக்க அனுமதி.!!

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை சந்தைப்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தைமயமாக்க அனுமதி.!!

இந்தியாவில், கொரோனாவுக்கு எதிராக கடந்தாண்டு முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென இந்திய தயாரிப்பிலான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், டோஸ் ஒன்றுக்கு 205 ரூபாய் செலுத்தி, மத்திய அரசே இந்த தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு விநியோகித்து வருகிறது.

இதுதவிர தனியார் மருத்துவமனைகளில், கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவோரிடம்  ஆயிரத்து 200 ரூபாயும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த வருவோரிடம் 750 ரூபாயும் வசூலிக்க மத்திய அரசு விலை நிர்ணயித்துள்ளது.

இந்தநிலையில் தற்போது அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள இவ்விரு தடுப்பூசிகளை சந்தைமயப்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது.

இதற்கான ஒப்புதலை நிபந்தனையுடன் தற்போது மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது. அதன்படி வெளிமார்க்கெட்டில்  இந்த தடுப்பூசிகளின் டோஸ் ஒன்றுக்கு 275 ரூபாயை நிர்ணியக்க மத்திய அரசு முடிவு  செய்துள்ளது.  இதன் மூலம் தடுப்பூசி நிறுவனங்களுக்கு டோஸ் ஒன்றுக்கு 33 சதவீதம் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.