பாஜகவை நம்பினீர்களே.? உங்கள் தற்போதைய நிலை என்ன? சிராக் பாஸ்வானின் அவல நிலைக்கு காங்கிரஸ் அனுதாபம்.! 

பாஜகவை நம்பினீர்களே.? உங்கள் தற்போதைய நிலை என்ன? சிராக் பாஸ்வானின் அவல நிலைக்கு காங்கிரஸ் அனுதாபம்.! 

பாஜகவால் கைவிடப்பட்ட சிராக் பாஸ்வானின் அவல நிலைக்கு காங்கிரஸ் அனுதாபம் தெரிவித்துள்ளது. 

பீகாரின் லோக் ஜன சக்தி கட்சி தலைவராக இருந்த சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பசுபதி பராஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சிராக் பாஸ்வான் கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் பசுபதி பராஸ்-க்கு மத்திய அமைச்சரவையில் பாஜக இடமளித்துள்ளது. இதற்கு சிராக் பாஸ்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில் சிராக் பாஸ்வானின் அவல நிலைக்கு அனுதாபம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் நிதீஷ் குமாரை வீழ்த்த பாஜக சிராக் பாஸ்வானை பயன்படுத்திக் கொண்டதாகவும், தற்போது சிராக் பாஸ்வானை வீழ்த்த அவரது சித்தபாவான பசுபதி பராஸ்-யை பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை சுட்டிக்காட்டிய அவர், பசுபதி பராஸ்-க்கு மோடி அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.