கிராமங்களுக்கு டிஜிட்டல் வசதி என்பது லட்சியம் அல்ல; தேவை - பிரதமர் மோடி

கிராமங்களுக்கும் டிஜிட்டல் வசதி என்பது லட்சியம் அல்ல, தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கிராமங்களுக்கு டிஜிட்டல் வசதி என்பது லட்சியம் அல்ல; தேவை - பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவற்றின் நோக்கம் மற்றும் திட்டங்கள் குறித்த வளர்ச்சியை பற்றி பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கும், கிராமங்களில் முறையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் கிராமங்களின் வளர்ச்சி குறித்து உரையாற்றினார். கிராமங்களுக்கு டிஜிட்டல் வசதி என்பது லட்சியம் அல்ல, தேவை என குறிப்பிட்ட அவர், இதன் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதி வழங்க முடியும் என்றும் அதே நேரத்தில் இவற்றின் மூலம் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் திறன் அதிகரிக்கும் என்றார்.

கிராமப்புற பொருளாதாரத்தின் முன்னேற்றம் பெண்களின் கையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அதன் அடிப்படையில் சுய உதவி குழுக்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.