முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள்!!எவை எவை??எதற்காக??

முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள்!!எவை எவை??எதற்காக??

இந்தியாவில் போலி செய்திகள் மூலம் மத கலவரத்தைப் பரப்ப முயன்ற 10 யூடியூப் சேனல்களை அரசு முடக்கியுள்ளது. இது தவிர, இந்தியாவில் 45 வீடியோக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்த சேனல்கள் சமூகங்கள் மத்தியில் அச்சத்தையும் குழப்பத்தையும் பரப்பும் வகையில் உள்ளது எனவும் புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்னிபாத் திட்டம், இந்திய ஆயுதப்படைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு , காஷ்மீர் தொடர்பான பிரச்சனைகளில் தவறான தகவல்களை பரப்புவதற்கு உரிய செய்திகளும் அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட தகவல்களும் வீடியோக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுடனான இந்தியாவின் எல்லைகளை சில வீடியோக்கள் தவறாக சித்தரித்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறுதலான வரைபடம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளது எனவும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதிகளின் கீழ் செப்டம்பர் 23 அன்று இந்த வீடியோக்களைத் தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக 102 யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகளை அரசாங்கம் தடை செய்தது. 

இதையும் படிக்க: ”இரு இந்துஸ்தான் கொள்கை”யை பின்பற்றுகிறதா இந்தியா!!!