முன்னாள் ஐபிஎஸ்-க்கே இந்த நிலைமையா? யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக கூறியதின் விளைவு!

2022 உத்திர பிரதேச தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை எதிர்த்து போட்டியிருவேன் என கூறிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்து அழைத்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அமிதாப் தாக்கூர் என்பவர் யோகி ஆதித்தியநாத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமிதாப் தாக்கூரை போலீசார் தற்கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக கூறி வலுகட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

https://twitter.com/yadavakhilesh/status/1431215646197510150

கைதின்போது போலீசார் வாகனத்தில் அமிதாப் தாக்கூரை வலுகட்டாயமாக ஏற்றும் வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆளும் கட்சியின் அராஜகபோக்கை கடுமையாக சாடியுள்ளார்.