ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்....! ரிக்டர் அளவில் ..?

ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்....! ரிக்டர் அளவில் ..?

ஜம்மு காஷ்மீரின் கத்ரா அருகே கிழக்கு வடக்கில் ,சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டு, அது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வானது, சரியாக இன்று காலை 07:52 மணியளவில் ஏற்பட்டது. 

இதுகுறித்து இந்தியா நிலநடுக்கவியல் மையம், தனது ட்விட்டர் பக்கத்தில்,   நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆகவும், 08-09-2022 அன்று  07:52:56 IST க்கு ஏற்பட்டது. அட்சரேகை : 33.14 & தீர்க்கரேகை : 75.58, ஆழம்: 10 கிமீ, இடம்: 62 கிமீ ENE கத்ரா, ஜம்மு காஷ்மீர் என்றும் பதிவிட்டுள்ளது. மேலும் இந்த அதிர்வால் குறிப்பிடும் அளவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம்  கூறியுள்ளது.

சமீப காலமாக கத்ரா பகுதி பல நில அதிர்வுகளை சந்தித்து வருகிறது. இதே போன்று கடந்த மாதத்திலும் இதே போன்று நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.