இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததன் எதிரொலி..! விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு..!

நாட்டில் விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால் விமான கட்டணங்கள் அதிகரிக்க கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததன் எதிரொலி..! விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு..!

விமான எரிபொருளின் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாதத்தின் 1 மற்றும் 16-ம் தேதிகளில் விமான எரிபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த முறை இதுவரை இல்லாத உச்ச வரம்பாக விமான எரிபொருளின் விலை 16.3 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை 1.41 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் விமான கட்டணங்கள் அதிகரிக்க கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், 10 முதல் 15 சதவீதம் அளவுக்கு கட்டணங்கள் உயர கூடும் எனவும் விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.