அதிகபடியான நன்கொடைகள் பெறும் அரசியல் கட்சிகள்...கடிதம் எழுதிய தேர்தல் ஆணையம்!

அதிகபடியான நன்கொடைகள் பெறும் அரசியல் கட்சிகள்...கடிதம் எழுதிய தேர்தல் ஆணையம்!

அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது 

நன்கொடை வரம்பு:

அரசியல் கட்சிகள் தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற முடியும். அதற்கு மேல் நன்கொடை பெற வேண்டும் என்றால் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலமாக மட்டுமே பெற முடியும். அப்படி ஒருவேளை 20 ஆயிரத்துக்கும் மேல் நன்கொடை பெறப்பட்டால் அதுகுறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும்.

முறைகேடுகள்:

இதில் சில அரசியல் கட்சிகள் 20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெறவில்லை எனக்கூறி அறிக்கை அளிக்கின்றன. ஆனால் 20 ஆயிரத்துக்கும் குறைவாக ஒவ்வொருவரிடமும் ரொக்கமாக நன்கொடை பெற்று அதிகபடியான பணம் திரட்டி விடுகின்றன. இதனால் இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: திமுகவில் இருந்து விலகினார் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்..2021 தோல்வி தான் காரணமா?

தேர்தல் ஆணையம் கடிதம்:

இது தொடர்பாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூவுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை 20 ஆயிரம் ரூபாயில்  இருந்து  2 ஆயிரமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெற்ற அனைத்து நன்கொடை விவரங்களையும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்யும் பட்சத்தில் நன்கொடை பெறுவதில் வெளிப்படை தன்மை இருக்கும் என அந்த கடித்தத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.