மகாநந்தா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து - யானை தப்பியோட்டம்!!

மேற்குவங்கம் மாநிலம் மகாநந்தா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து யானை ஒன்று தப்பி அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாநந்தா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து - யானை தப்பியோட்டம்!!

மகாநந்தா வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட யானை ஒன்று இன்று காலை அங்கிருந்து தப்பி அருகே உள்ள சால்பாரி கிராமத்திற்குள் நுழைந்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை குடியிருப்பு பகுதியில் இருந்து காட்டுப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில், யானை ஒரு வீட்டின் கதவை திறந்து தெருக்களில் உலா வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.