1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு... ஐ.டி.நிறுவனங்கள் அறிவிப்பு...

வருகிற 2022 நிதியாண்டில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொறியாளர்களை பணியமர்த்த உள்ளதாக ஐடி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு... ஐ.டி.நிறுவனங்கள் அறிவிப்பு...
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொழில் நிறுவனங்கள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதன்காரணமாக ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலர் அதிரடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டதோடு, புதிய நபர்களும் பணியமர்த்தப்படாமல் இருந்தனர். 
 
இந்த நிலையில் 2022-ம் ஆண்டு, 150 பில்லியன் டாலருக்கு  உலகளவில் தொழில்நுட்ப சேவையை பெருக்க திட்டமிட்டுள்ள ஐடி நிறுவனங்கள்,  புதிதாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க இன்போஸிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் உள்ளிட்ட தலைசிறந்த ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 
இதனால் ஒட்டுமொத்தமாக ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.