பரபரக்கும் காங்கிரஸ் தேர்தல்..! தேர்தலில் ராகுல்?

பரபரக்கும் காங்கிரஸ் தேர்தல்..! தேர்தலில் ராகுல்?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்ற விவாதம் எழுத்து வரும் நிலையில், காங்கிரஸ் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் தேர்தல்:

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலானது, அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முடிவுகள் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிக்க கட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், தேர்தலை கண்டுகொள்ளாது ராகுல் காந்தி தென் மாநிலங்களில், கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.

தீர்மானங்கள்:

இதனால், தலைவராக தேர்வாவதில் ராகுலுக்கு விருப்பம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வரும் சூழலில், அவரே தலைவராக வேண்டும் என பல மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. குறிப்பாக தமிழகம், புதுவை, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து, தற்போது ஹரியானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: வென்டிலேட்டரில் சந்திரசேகர ராவ் அரசாங்கம்..! மகாராஷ்டிராவை அடுத்து தெலுங்கான குறிவைப்பு..?

சூடுபிடிக்கும் களம்:

இதனிடையே இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான, அசோக் கெலாட் மற்றும் சசிதரூர் ஆகியோரும் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், அண்மையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, அனுமதி கோரியிருந்தார். இந்த நிலையில், நேற்றிரவு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் சோனியாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.