நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு

லக்கிம்பூர் கேரி வன்முறையை கண்டித்தும், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தியும் விவசாயிகள் இன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த நிலையில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்தது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா-வின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,  மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மத்திய இணையமைச்சர் மகன் என்பதால் சிறையில் ஆஷிஷ் மிஸ்ரா-வுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் விசாரணையில் மென்மையான போக்கு கடைபிடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் லக்கிம்பூர் கேரி வன்முறையை சம்பவத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் சார்பில் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ரயில் போக்குவரத்து பாதிக்க கூடும் என தெரிகிறது.