போராட்டம் வாபஸ் இல்லை...  விவசாயிகள் திட்டவட்டம்...

விவசாயிகள் போராட்டம் மற்றும் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை விவசாய சங்கங்கள் அமைத்துள்ளது. .

போராட்டம் வாபஸ் இல்லை...  விவசாயிகள் திட்டவட்டம்...

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா, குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் விவசாயிகளுடைய போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில் அவர்கள் எப்போது போராட்டத்தை கைவிடுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி-பஞ்சாப் எல்லையான சிங்கு-வில் சம்யூக்த் கிஷான் மோர்ச்சா தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சிங்கு காஷிபூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் விவசாயிகள் போராட்டத்தை முடித்து கொள்வது தொடர்பாகவும், விவசாயிகளுடைய இதர கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவே விவசாயிகளுடைய கோரிக்கைகளை மத்திய அரசுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்வதற்காக 7ம் தேதி சம்யூக்த் கிசான் மோர்சாவின் மற்றொரு கூட்டம் நடைபெற உள்ளதாக விவசாய சங்கங்களின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.