மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம்..! நிர்மலா சீதாராமன் அதிரடி..!

மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம்..! நிர்மலா சீதாராமன் அதிரடி..!

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை எந்த ஒரு அரசும், மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரழிவு:

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்துவதாக  பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். 

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை:

இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரிய வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதனிடையே நாட்டில்  இலவச கல்வி, மருத்துவம் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். 

மேலும் படிக்க: இன்றே கடைசி நாள்..!  மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு..!

கெஜ்ரிவாலுக்கு பதிலடி:

கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை எந்த ஒரு அரசும், மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் அளிப்பதை, இலவச அறிவிப்பாக கூறியதில்லை என சாடியுள்ளார்.  தற்போது இது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கூறியதன் மூலம்  ஏழை, எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், இதுகுறித்து அனைத்து தரப்பினரும் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடவும் கேட்டுக்கொண்டார்.