கடனுக்காக முத்திரை பத்திரங்களில் விற்கப்படும் சிறுமிகள்.. ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ்.!

3 முறை விற்ற சிறுமி 4 முறை கர்ப்பமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..!

கடனுக்காக முத்திரை பத்திரங்களில் விற்கப்படும் சிறுமிகள்.. ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ்.!

சாதிப் பஞ்சாயத்து:

ராஜஸ்தானில் கொடுத்த கடனை திருப்பி செலுத்தாததால் சிறுமிகள் முத்திரைத் தாள்களில் விற்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்னைகள், சாதிப் பஞ்சாயத்துகளிடம் செல்லும். அவ்வாறு செல்லும் போது, 

சிறுமிகளை விற்க வேண்டும்:

கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினரின், 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை முத்திரை பத்திரத்தில் கடன் வாங்கியவர்களிடம் விற்க வேண்டுமாம். சிறுமிகளை விற்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தாய்மார்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவார்களாம். 

4 முறை கர்ப்பமான சிறுமி:

முத்திரை பத்திரங்களில் விற்கப்படும் சிறுமிகள் மும்பை, டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு தாய் ரூ.6லட்சத்திற்காக தனது மகளை 3 முறை விற்ற நிலையில், சிறுமி 4 முறை கர்ப்பமானது தெரியவந்துள்ளது. 

ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ்:

இது குறித்து பொதுவெளியில் தெரியவர, சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நடவடிக்கைகள், அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதிலளிக்க ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.