கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அம்மாநில அரசு அறிவுறுத்தல்...

கேரளாவில் உள்ள இடுக்கி உள்ளிட்ட 3 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அம்மாநில அரசு அறிவுறுத்தல்...

கொட்டித் தீர்த்த கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. அங்கு நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், உபரிநீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் அம்மாநில அரசு உள்ளது. 169 மீட்டர் உயரம் கொண்ட இடுக்கி அணை தற்போது 93 விழுக்காடு அளவுக்கு நிரம்பியுள்ளது. இதன் காரணமாக அந்த அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரைத் திறந்து விட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இடுக்கி அணையில் தண்ணீர் திறந்து விட்டாலும் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பத்தினம்திட்டாவில் உள்ள கக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள இடமலையார் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள 10 அணைகள் முழு கொள்ளவை எட்டி வருவதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.