மும்பையிலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணம் செய்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்...

மும்பையிலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணம் செய்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்...

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணம் செய்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டது.

இதனை மீறியவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டது. இந்த நிலையில், தற்போது மகராஷ்டிர மாநிலம் மும்பையிலும் ஹெல்மேட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களில் இந்த விதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீறுபவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிப்பதுடன் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.