காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...

காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், முதன்முறையாக அங்கு 3 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு,  அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று  தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான காவலர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். பின்னர் உளவுத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன், ஜம்முவின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

இந்தநிலையில், இன்று ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஐஐடி வளாகத்தை அமித்ஷா திறந்து வைத்தார். அதன்பின் மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அவர், இரு பட்டப்படிப்பு பாடத்திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் காஷ்மீர்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த பாஜக தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.  தொடர்ந்து ஜம்முவில் உள்ள டிஜியானா குருத்வாராவுக்கு அமித்ஷா செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.