குழந்தைகளை தாக்கும் 3-ம் அலை! கார்டூன் ஓவியங்களுடன் தயாரான மருத்துவமனை!!

புதுச்சேரி அரசு மருத்துவனையில் குழந்தைகளுக்கென பிரத்யேக முறையில் அமைக்கப்பட்டுள்ள கார்டூன் ஓவியங்கள் நிறைந்த அறைகள் காண்போரை கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை படிப்படியாக ஓய்ந்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் அலை தாக்கக்கூடும் என உலக சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மூன்றாம் அலையில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவர் என்ற கூற்று பரவி வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகளை பல்வேறு மாநில அரசுகளும் துரிதப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் புதுச்சேரி  இந்திரா காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் புதுவித முயற்சியை கையில் எடுத்துள்ளது. மருத்துவமனை என்றாலே ஒருவித அச்ச உணர்வு கொண்ட குழந்தைகளின் மனநிலையை மாற்ற கார்டூன் ஓவியங்கள் கொண்ட அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் முன்பு அவர்களின் மனநிலையை சீராக்க வேண்டும் என்று நினைத்து, அதற்கேற்ப சுற்றுச்சூழல் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. பெயிண்ட் பாண்டிச்சேரி மற்றும் கேர் மேக்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்த புதுச்சேரி சுகாதாரத்துறை, குழந்தைகள் பிரிவு முழுவதும் அவர்கள் விரும்பும் கார்டூன் கதாபாத்திரங்களை ஓவியங்களாக வரைந்து வருகிறது.