ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை... சீனா, ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்காவும் நடத்தியது ...

சீனா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்காவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை... சீனா, ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்காவும் நடத்தியது ...

ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது தான் "ஹைப்பர்சோனிக்" ஏவுகணைகள். இதனால் பாரம்பரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலவும் செயல்பட முடியும். தங்களது ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு நிரூபிக்கும் வகையில் சீனா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து தற்போது அமெரிக்காவும் அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை அதீத சூழ்ச்சித்திறன் கொண்டவை மற்றும் வளிமண்டலத்தில் குறைந்த பாதையை கூட எளிதில் கண்டறியக் கூடிய ஆற்றல் பெற்றது எனவும் கூறப்படுகிறது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் ராணுவத்தில் இணைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.