மாணவர்களை ஆபத்தில் தள்ள விரும்பவில்லை :  உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து !!

மாணவர்களை ஆபத்தில் தள்ள விரும்பவில்லை :  உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து !!

நீட் தேர்வு : நீட் முதுநிலை தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் வினாத்தாளை வெளியிடதா மருத்துவ கல்விக்கான தேசிய தேர்வு வாரியத்தின் (NBE) முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இவ்விவகரத்தில் தேசிய தேர்வு வாரியத்திற்கு விடைத்தாள் வெளியிட உத்தரவிட வேண்டும், மேலும் வழிகாட்டு நெறிமுறை வெளியிட வேண்டும் என கேட்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க : கனல் கண்ணன் ஜாமீன் மனு : காவல்துறை பதிலளிக்க உத்தரவு !!

நீதிபதி கருத்து : இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி நீட் முதுநிலை கவுன்சிலிங் நடைபெறவுள்ள நிலையில் இவ்வழக்கில் சில விளக்கங்கள் தேவை என்பதால் வழக்கை அதற்கு முன்பு பட்டியலிட வேண்டும் என நீதிபதி டி.ஓய். சந்திரசுட் மற்றும் ஹிமா ஹோலி முறையிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், செப்டம்பர் 1ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது இந்நேரத்தில் நாங்கள் இவ்விவகரத்தில் தலையிட்டு நாங்கள் மாணவர்களை ஆபத்தான நிலைக்கு தள்ள விரும்பவில்லை என நீதிபதி டி.ஓய் சந்திரசுட் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி நடைபெறும் : மேலும், இவ்விவகரத்தில் இப்போதைக்கு தலையிட விரும்பவில்லை என கூறிய நீதிபதி திட்டமிட்டபடி கவுன்சிலிங் நடைபெறட்டும் என கூறினார். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவினால் வரும் செப் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலை கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடைபெறும் என உறுதியாகியுள்ளது.