உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் - தேவேந்திர பட்னாவிஸ் சூளுரை!

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் - தேவேந்திர பட்னாவிஸ் சூளுரை!

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிவசேனா கட்சியின்  பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய  தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே அரசின் அதிகாரம் பாபர் மசூதி அமைப்பு போன்று உள்ளதாகவும் அதை வீழ்த்தும் வரை ஓய மாட்டேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன் பற்றி உத்தவ் தாக்கரே ஒருபோதும் பேசவில்லை என்றும் புலிகளின் புகைப்படங்களை கிளிக் செய்வதன் மூலம் ஒருவர் புலியாகி விடுவதில்லை, இப்போது நாட்டில் ஒரே ஒரு புலிதான் உள்ளது அது மோடி என்றும் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டார்.