2024 மக்களவை தேர்தலில், 130 கோடி மக்களுடன் மட்டுமே கூட்டணி - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!

2024 மக்களவை தேர்தலில், 130 கோடி மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கவுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவை தேர்தலில், 130 கோடி மக்களுடன் மட்டுமே கூட்டணி - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,  பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி தனக்கு எதுவும் புரியவில்லை என கூறியுள்ளார். கூட்டணியை தான் விரும்பவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது யாரையாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தான் என கூறிய அவர், தனக்கு யாரையும் தோற்கடிக்கும் எண்ணம் இல்லை என்றும், மாநிலங்களின் இலவச அறிவிப்புகள் பொருளாதாரத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.