தொடரும் பெட்ரோல் விலை உயர்வு : எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு !!  

இதுவரை இல்லாத அளவுக்கு 6 மாதத்தில் 25 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை. பெட்ரோல் விலை அதிகரிப்பால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு. 

தொடரும் பெட்ரோல் விலை உயர்வு : எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு !!  

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தப்பி கொள்ளவும், சுற்றுசூழலை காக்கும் வகையிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அரசும், மக்களும் அதிகரித்து கொள்கின்றனர்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை தொடக்கத்தில் அதிகரிக்கவில்லை என்றாலும் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து அதன் விற்பனை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் உலக அளவில் அதிக காற்று மாசு உள்ள நகரங்ககளில் ஒன்றான டெல்லியில் கடந்த 6 மாதங்ககளில் அதிக அளவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.

கடந்த 2021ன் ஒட்டுமொத்த ஆண்டில் டெல்லியில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை 25,814 ஆகும். ஆனால், 2022ம் ஆண்டின் முதல் 6 மாதம் 25,890 வாகங்கள் விற்பனை ஆகியுள்ளது.

குறிப்பாக ஜனவரி 1 முதல் ஜூன் 30ம் தேதி வரை டெல்லியில் பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த வாகனங்களில் 9.3% வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான கவனம் மக்களுக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இதனால் சுற்றுசூழல் காக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.