ஒரே நாளில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை...

ஒரே நாளில் 2 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.

ஒரே நாளில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை...

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2 கோடிக்கு பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே அதிகபட்சம் என்பதாகும். இன்று பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஒரு கோடியே 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியது தான் இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 2 கோடி பேருக்கு செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 77 கோடிக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.