ஒரே பூமி, ஒரே குடும்பம்! பிரதமர் மோடி பெருமிதம்!

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது.
ஜி20 அமைப்பு:
இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பு என வளரும் மற்றும் வளர்ந்த 20 நாடுகளும் கொண்ட கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு செயல்படுகிறது.
தலைமை பொறுப்பு:
இந்நிலையில் கடந்த 16ம் தேதி, ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்தியா இப்பொறுப்பை இன்று ஏற்கிறது.
இதையும் படிக்க: ”எம்.ஜி.ஆர் எனது பெரியப்பா...” நெகிழ்ந்த முதலமைச்சர்!!!
ஒரே பூமி, ஒரே குடும்பம்:
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பணிபுரிவோம் என தெரிவித்துள்ளார். மேலும், பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கையை பாதுகாக்கும் இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையில் நீடிக்கவல்ல மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஊக்கப்படுத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மையப்பொருள்:
இந்தியாவின் ஜி20 பொறுப்பின் மையப்பொருள் என்பது அனைவரையும் உட்படுத்தியதாக லட்சியமிக்கதாக செயல்பாடுகள் சார்ந்ததாக உறுதியானதாக இருக்கும் எனவும், புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் மையமாக இத்தலைமையை உருவாக்க பாடுபடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.