ஆப்கானிஸ்தானுக்கு 2,500மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பிய இந்தியா..!

மீதமுள்ள 14,000 மெட்ரிக் டன் கோதுமையும் விரைவில் அனுப்பப்படும் என மத்திய அரசு தகவல்.!

ஆப்கானிஸ்தானுக்கு 2,500மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பிய இந்தியா..!

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 2,500 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதுவரை 14 முறை இதுபோன்று கோதுமையை அனுப்பியுள்ள இந்தியா, தற்போது 15வது முறையாக கோதுமையை அனுப்பி வைத்துள்ளது. அட்டாரி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானைக் கடந்து இந்த கோதுமை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஐநா உணவுப் பாதுகாப்பு அமைப்புடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை தருவதாக இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது. அதில் தற்போது வரை 36,000 டன் கோதுமையை இந்தியா வழங்கியுள்ளது. மீதமுள்ள 14,000 மெட்ரிக் டன் கோதுமையும் விரைவில் அனுப்படப்பட உள்ளது.