கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா விரைந்து மறுஆய்வு செய்ய வேண்டும் - ஐஎம்எப் தலைவர்

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா விரைந்து மறுஆய்வு செய்ய வேண்டும் என சர்வதேச பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா கேட்டுக்கொண்டுள்ளார்.

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா விரைந்து மறுஆய்வு செய்ய வேண்டும் - ஐஎம்எப் தலைவர்

கோடை வெயில் தாக்கம் காரணமாக இந்தியாவில் கோதுமை உற்பத்தியானது வெகுவாக குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து உலக நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, அதற்கு தற்காலிக தடை விதித்தது.

இதனிடையே ரஷ்யா- உக்ரைன் போரால் கடும் உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வரும் உலக நாடுகள், இந்தியாவின் அறிவிப்பால் மேலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.

இந்தநிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய சர்வதேச பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உணவு பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து சர்வதேச நாடுகள் உணவு பொருள் ஏற்றுமதிக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியாவில் வசிக்கும் 135 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், கோதுமை ஏற்றுமதியை மீண்டும் தொடர்வது குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரினார்.